Our Feeds


Saturday, August 29, 2026

Zameera

கொழும்பு முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அலைகள் உயரும் எச்சரிக்கை!


 கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


அதன்படி, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »