முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து இன்று (11) செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் பொறுப்பாகும். இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நடைமுறைகளை அரசாங்கம் அமுல் படுத்த வேண்டும்.
சில அரச உத்தியோகத்தர்களின் இது போன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும்.
இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக் குறிக்கும்.
எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற தலையீடு செய்யப் படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tuesday, August 11, 2026
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் உறுதியான தீர்மானத்துக்கு அரசாங்கம் வரவேண்டும் - இம்ரான் எம்.பி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
