Our Feeds


Showing posts with label # news. Show all posts
Showing posts with label # news. Show all posts

Thursday, February 20, 2025

Admin

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு இடையிலான சந்திப்பு  புதன்கிழமை (19) நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்திய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவது குறித்து இதன்போது இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Tuesday, February 18, 2025

Admin

மின் தடை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான தீர்வு!

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின் தடை மற்றும் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான குறுகியகால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

திடீர் மின் தடையை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கை மற்றும் வழிமுறைகள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சில மின் பிறப்பாக்கிகளைக் குறைந்த இயக்க மட்டங்களில் வைத்திருத்தல், சிக்கல்களைத் தவிர்க்கத் தேவைப்படும்போது குறைந்த கேள்வியுள்ள காலங்களில் சூரிய சக்தியைக் குறைத்தல் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளில் உள்ளடங்குவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Monday, February 17, 2025

Admin

டில்லியில் நிலநடுக்கம்!


டில்லியில் அதிகாலை வேளையில் திடீரென  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இது ரிச்டர் அளவுகோலில் 4.3 என பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக  வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாகவும் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Monday, February 3, 2025

Admin

அதிகரித்த வீதி விபத்துக்களுக்கு இதுதான் காரணம்!


நாடளாவிய ரீதியாக இடம்பெறும் பல்வேறு வீதி விபத்துக்களுக்கு வாகனங்களை முறையாகப் பராமரிக்காததே காரணம் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக, மக்கள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

"வாகனங்களில் ஏற்படும் பிரச்சனைகள் பெரும்பாலும் விபத்துகளுக்கு காரணமாக இருக்கலாம், மேலும் விபத்தின் தீவிரத்தை அதிகரிக்கவும் கூடும். தற்போதைய பொருளாதார நிலைமைகளால், சிலர் தமது வாகனங்களை முறையாகப் பராமரித்து, சர்வீஸ் செய்யும் செயற்பாட்டை தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, சில நேரங்களில் வீதியில் உள்ள வாகனங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. 4 ரயர்களையும் மாற்ற வேண்டும்.

ஆனால் பல்வேறு காரணங்களால் ரயர்களை மாற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் ரயர்களின் தரம் முக்கியமானது. வேகத்தை கட்டுப்படுத்த அது பாரிய பங்களிப்பை வழங்குகிறது. சில தருணங்களில் வாகனங்கள் நழுவிச் செல்வதற்கும் இவ்வாறான ரயர்களே காரணம். சில நேரம் பயணம் செய்யும் போது அது வெடிக்கக்கூடும். இந்த வகையான விபத்து பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம். போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், முறையாகப் பராமரிக்கப்படும் வாகனத்தை ஓட்டுவதன் மூலமும், பல விபத்துகளைக் குறைக்கலாம்."

Tuesday, January 28, 2025

Admin

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.  

வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி பதவியிலிருந்து விலகுவதாகப் பேராசிரியர் ரகுராம் அறிவித்திருந்தார்.  

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.  

இந்தநிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் இடம்பெற்றது.  

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும், சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்கள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 

 அத்துடன், திட்டமிட்ட முறையில் விசாரணைகளிலே தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழியமைத்துக் கொடுப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.  

எவ்வாறாயினும், இந்த கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று முதல் விரிவுரைகளைப் புறக்கணிப்பதற்கு தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 22, 2025

Admin

IMF ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

புதிய நிர்வாகத்தின் கீழ் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல வரிச் சலுகைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளதை விட மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமைகளின் கடினமான விடயங்களை ஓரளவுக்குக் குறைக்கத் தயாராக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

வருமானம் ஈட்டும் போது செலுத்த வேண்டிய வரி எல்லையை 150,000 ரூபாயாக உயர்த்துவது, குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய பால் பொருட்கள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) விலக்கு, பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு மாணவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆகியவையும் இதில் அடங்கும் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.