Our Feeds


Friday, September 4, 2026

Zameera

நாமல் ராஜபக்ஷ கைது: ஐ.தே.க. கடும் கண்டனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும்  ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.



அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளது.



தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Zameera

கொழும்பு, புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை நீடிப்பு


 அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை இன்று (04) இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நுவகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும், சேத்சிறிப்பாய, ஹிம்புத்தான, உடுமுல்ல வீதி, கொழும்பு 06 மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை நீட்டிக்கப்பட்டதால் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இந்தக் காலப்பகுதியில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Zameera

நாமல் ராஜபக்ஷ்வை கைது செய்தது, பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு பிரச்சாரமாக அமைந்து விட்டது - முஜிபுர் ரஹ்மான்


 எம்.ஆர்.எம்.வசீம்)


நாமல் ராஜபக்ஷ்வை கைதுசெய்ததன் மூலம் அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு போதுமான பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.

அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என ஐ்க்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

யார் தவறு செய்திருந்தாலும் அது தொடர்பில் விசாரணை நடத்தி, சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பானவர்களையே விசாரணைக்கு அழைத்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதை காணக்கூடியதாக இருக்கிறது.


அரசாங்கத்தில் இருக்கும் பலருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டிருக்கின்றபோதும் அது தொடர்பில் எந்த விசாரணையும் இடம்பெறுவதாக தெரியவில்லை.

துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்தமை உள்ளிட்ட பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ்வுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருந்த முறைப்பாடு ஒன்றுக்காக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தது.

பொதுஜன பெரமுன அடுத்தவாரம் அநுராதபுரத்தில் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், நாமலின் கைதானது, பொதுஜன பெரமுனவின் கூட்டத்துக்கு அரசாங்கம் பாரிய பிரசாரத்தை வழங்கி இருக்கிறது.

என்றாலும் அரசாங்கம் மக்களுக்கு செய்யவேண்டிய முக்கிய பல விடயங்கள் இருக்கும்போது, அவை அனைத்தையும் மறந்துவிட்டு எதிர்க்கட்சியினரை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் மூலம் அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கே முயற்சிக்கிறது என்றார்.

SHAHNI RAMEES

நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்...

 


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்

Zameera

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில்


 இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


 


பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்காக நாற்காலிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்காகத் தகுதியான முறையில் தெரிவுசெய்யப்பட்ட நிறுவனத்தை நீக்கிவிட்டு, தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கி 79 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

Zameera

நாமல் ராஜபக்ஷ கைது


  நாமல் ராஜபக்ஷ கைது
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகிய நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

Zameera

கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு


 நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 


வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 


இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 


இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Zameera

16 வயது சிறுவன் சித்திரவதை: சிறுவர் இல்ல காப்பாளர் தம்பதி கைது


 கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். 


சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்த் தூள் தூவி துன்புறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


பாதிக்கப்பட்ட சிறுவன் மாரஸ்ஸன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


சந்தேகநபர்களை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது!

 


முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் பக்குவம் இருக்க வேண்டும் - பிரபா கணேசனுடனான சந்திப்பில் செந்தில் தொண்டமான் தெரிவிப்பு.

 

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் பக்குவம் இருக்க வேண்டும்
SHAHNI RAMEES

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு மரண தண்டனை | வியட்நாம் அதிரடி!

 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேருக்கு மரண தண்டனை
SHAHNI RAMEES

ஜோன்ஸ்டன் இலஞ்சம், ஊழல் ஆணைக்கழுவில் ஆஜர்!

 


முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

SHAHNI RAMEES

நாமல் ராஜபக்ஷ இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

 


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம்