Our Feeds


Monday, October 26, 2026

Zameera

அத்தனகலு - களனி நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை!

 

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கந்தான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




அதேவேளை, களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.




எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Zameera

சீரற்ற வானிலையால் 12 பேர் உயிரிழப்பு ; 25 பேர் காயம்!

 

(செ.கவிஷனா)



வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப்பலத்த மழை பதிவாகி சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதுடன், கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இந்தச் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


மாதம்பை - மெல்லவாகார வீதியில் உள்ள களு அத்துர வான்கதவின் வெள்ளப்பெருக்கில் சிக்கி நபர் ஒருவர் அடித்துச் செல்லப்படட்டுள்ளார். நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் 3 பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இத்தொடர் மழை காரணமாகக் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து இரத்தினபுரி மற்றும் நாவலப்பிட்டியின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரியில் களு கங்கையின் நீர்மட்டம் 7 அடியைத் தாண்டியதால் தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.


அத்துடன் களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கம்பஹாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி - பாணந்துறை A8 பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடைப்பட்டு, பின்னர் பொலிஸாரினாலும் பிரதேச வாசிகளினாலும் சீர்செய்யப்பட்டது.



இதனிடையே, மழைநீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 14 பிரதான நீர்தேக்கங்களின் வான் பாய்ந்து வருவதுடன் குகுலே கங்கை, பொல்கொல்ல, விமலசுரேந்திர, லக்ஷபான, மேல் கொத்மலை, தம்புள்ளை இப்பன்கட்டுவ, கலா வாவி, தெதுரு ஓயா, நோர்ட்டன் கேனியன் மற்றும் இராஜாங்கனை ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை ஓயா நீர்தேக்கத்தின் வான் கதவு திறக்கப்பட்டு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கலா வாவியின் இரண்டு அவசர வான் கதவுகள் 6 அங்குல உயரத்திற்குத் திறக்கப்பட்டு நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றன.


இராஜாங்கனை நீர்தேகத்தின் 8 வான் கதவுகள் (அதில் 6 கதவுகள் மூலம் வினாடிக்கு 3,827 கன அடி நீர்) திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. விக்டோரியா நீர்தேக்கம் தனது அதிகபட்சக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படவுள்ளதுடன், காசல்ரீ நீர்தேக்கமும் வான்பாயும் மட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ஆறுகள் மற்றும் நீர்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நில மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Zameera

ஈரான் மீது இன்று தாக்குதல் இல்லை: ட்ரம்ப் அறிவிப்பு!

 

ஈரானுக்கு எதிராக திங்கட்கிழமை (26) இராணுவத் தாக்குதல் நடத்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பாரிய தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என ட்ரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


எனினும், ஈரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதா அல்லது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை முழுமையாக நிராகரிக்கவில்லை.


இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்க மோதலால் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கட்டார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றத்தைத் தணித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Zameera

சாதாரண தர அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!

 

2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) ஒரு நாள் மட்டும் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அழகியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைக் குழுக்கள் முன்பே திட்டமிட்டபடி உரிய நிலையங்களில் நடைபெறும் என அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சார்த்திகள் உரிய வலையத்தின் வலையக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு:

உடனடி அழைப்பு இலக்கம் (Hotline): 1911

தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537

தொலைநகல் (Fax): 0112784422


 


ShortNews

இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!


இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று (25) இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன்படி, இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொடை, கிரியெல்ல, அயகம, பெல்மதுளை, பனாவென்ன, காவத்தை மற்றும் ஓப்பநாயக்க உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் களு கங்கை மற்றும் அதன் துணையாறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஆற்றங்கரையோரங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ShortNews

எதிர்வரும் நாட்களில் 150 மிமீ கன மழை!


வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் "அர்னாப்" (Arnab) புயலின் மறைமுகத் தாக்கங்கள் காரணமாக, எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதற்கமைய, வடக்கு, மேல், தென், சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை (28) வரை 100 - 150 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ShortNews

தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!


தி.மு.க முன்னாள் பாடசாலை கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 177 தனியார் பாடசாலைகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி, சென்னை மற்றும் திருச்சியில் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று(26) சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்பிணை மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பணப் பரிவர்த்தனைகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.

SHAHNI RAMEES

முகமது நசீமுக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது உச்ச நீதிமன்றம்!

 


1.74 மில்லியன் ரூபா ஜீவனாம்ச நிலுவைத் தொகையைச்

ShortNews

வான்பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்!


நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் இன்று (26) காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான்பாயத் தொடங்கியுள்ளது.

நீர்த்தேக்கம் வான்பாய்வதனால் வெளியேற்றப்படும் நீர் காரணமாக, களனி கங்கையில் கலக்கும் கெசல்கமு ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டமும் தற்போது உயர்ந்துள்ளது.

எனவே, குறித்த நதியை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அடுத்த சில மணிநேரங்களுக்கு மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு பாதுகாப்புப் பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ShortNews

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவும் - ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை!


மூன்று மகா நாயக்க தேரர்களின் தலையீட்டின் கீழ் கலஹொடஅத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“கலஹொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகம், மகா நாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கpணங்க ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என உயர்நீதிமன்றத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலஹொடஅத்தே ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பேரணி மற்றும் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இவை பாரிய தவறுகளாகும்.

அதேபோல், அவரது காவி உடையை அகற்றுமாறு உத்தரவிட்டவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துவது உசிதமானது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ShortNews

சீரற்ற காலநிலை - 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!


சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அயகம, பெல்மதுளை, குருவிட்ட, எலபாத மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (26) பிற்பகல் 2.45 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிவிப்பு, நாளை (27) பிற்பகல் 2.45 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட, தொடங்கொடை, புளத்சிங்கள மற்றும் மதுராவல

கண்டி மாவட்டம்: உடநுவர மற்றும் பஸ்பாகே கோரள

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, அரநாயக்க, கலிகமுவ மற்றும் தெரணியாகல

குருநாகல் மாவட்டம்: குருநாகல்

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரள, கொத்மலை கிழக்கு மற்றும் நோர்வூட்

இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகல, கிரிஎல்ல, பலாங்கொடை, எஹலியகொட மற்றும் களுவான

எச்சரிக்கை நிலை 1 - விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

காலி மாவட்டம்:
கரந்தெனிய மற்றும் தவலம

கம்பஹா மாவட்டம்: அத்தனகல

களுத்துறை மாவட்டம்: மில்லனிய, இங்கிரிய, பேருவளை, ஹொரணை மற்றும் பாலிந்தநுவர

கண்டி மாவட்டம்: உடப்பளாத்த, உடதும்புர மற்றும் கங்க இஹல கோரள

கேகாலை மாவட்டம்: ருவான்வெல்ல, வரக்காபொல, கேகாலை, மாவனல்லை மற்றும் யட்டியந்தோட்டை

குருநாகல் மாவட்டம்: மாவத்தகம, நாரம்மல மற்றும் அலவ்வ

நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, வெலிகெபொல, கஹவத்தை மற்றும் கொலொன்ன

Zameera

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு

 

ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக, ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.


 


இன்று (26) பிற்பகல் 3.30 மணியளவில் இரண்டு பேருந்துகளின் பின்புறப் பகுதியின் மீது இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


 


இச்சம்பவத்தினால் இரண்டு பேருந்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


 


மண்மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏனைய பேருந்துகளை அப்புறப்படுத்த தனியார் பேருந்து நிலையத்தின் நேரக்கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHAHNI RAMEES

நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!

 


தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக