Our Feeds


Monday, December 27, 2021

ShortNews

EPlus Exams Sri Lanka கல்வி நிறுவனத்துக்கு சிறந்த பங்குதாரருக்கான விருது - அமைச்சர் சுசில் வழங்கி வைப்பு

 


EPlus Exams ஸ்ரீலங்கா நிறுவனம் என்பது VTA Sri Lanka,SDFL Sri Lanka,Edhat UK ஆகியவற்றுடன் இணைந்து EPlus Exams Sri Lanka நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. வி.ஜனகன் அவர்களின் தலைமையில் இலங்கையில் உள்ள 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் பங்குதாரராக மிகச் சிறப்பாக உயர்கல்வி செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் அமேசன் கல்லூரியோடும் பங்குதாரர்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் EPlus Exams ஸ்ரீலங்காவை பாராட்டி  அமேசன் கல்லூரியின் 2021 பட்டமளிப்பு விழாவில் EPlus Exams Sri Lanka கல்வி நிறுவனத்துக்கு சிறந்த பங்குதாரருக்கான விருது கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்.சுசில் பிரேமஜயந்த அவர்களினால் EPlus Exams Sri Lanka கல்வி நிறுவனத்தின் முக்கியஸ்தர் றிஸ்கான் முகம்மட் அவர்களிடம்  பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »