பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்த குற்றச்சாட்டு -சிக்களில் சிக்கினார், மலேசியாவின் முன்னாள் பிரதமர்
பல கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்களை ஊழல் தடுப்பு அமைப்பிடம் அறிவிக்கத் தவறியதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யஃகூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பதவியிலிருந்து விலகிய பிறகு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மலேசியாவின் மூன்றாவது முன்னாள் பிரதமர் இவராவார்.
மலேசியாவின் ஊழல் தடுப்பு அமைப்பிடம் தனது சொத்துக்கள் குறித்த முழுமையான அறிவிப்பை வழங்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, 66 வயதான அவர் வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்து வாதிட்டார்.
