Our Feeds


Saturday, August 15, 2026

SHAHNI RAMEES

கழிவுகளிலிருந்து அதிக வருமானத்தை ஈட்டும் அக்குறணை பிரதேச சபை தலைவர் இஸ்திஹாரின் புதிய முன்னெடுப்பு!


கண்டி மாவட்ட அக்குறணை பிரதேச சபையின்

Zameera

காலநிலை மாற்றத்தால் சிறுவர்களுக்கு நோய் அபாயம் அதிகரிப்பு


 நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் வெப்பநிலை மற்றும் ஏனைய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்படும் வானிலை மாற்றங்களால் சிறுவர்களிடையே பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நீர்ச்சத்து இழப்புக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதால், போதுமான அளவு நீரை அருந்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வயது வந்த ஒருவர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3 லீற்றர் நீரை அருந்துவது பொருத்தமானது எனத் தெரிவித்த வைத்தியர், சிறுவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப போதுமான அளவு நீரை வழங்குவதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக போதுமான அளவு நீரை அருந்தாமல் இருப்பது சிறுநீரகக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், போதுமான அளவு நீர் அருந்தாமல் திறந்தவெளிகளில் பணியாற்றுதல் அல்லது சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், சில சந்தர்ப்பங்களில் அவை உயிரிழப்புக்கும் வழிவகுக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நீர் போத்தல் ஒன்றை உடன் எடுத்துச் செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதால், சிறுவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளை மட்டுமே வழங்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, எலுமிச்சை, தோடம்பழம், இளநீர், கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கையான திரவ உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குமாறும் வைத்தியர் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், சிறுவர்கள் கைபேசிகளில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து, அவர்களை உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்துமாறும் பெற்றோரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Zameera

அங்குலான கடற்பரப்பில் கடற்படை படகு விபத்து – 11 பேர் மீட்பு



அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா (Dora) படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அந்தப் படகில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த படகில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, விபத்துக்குள்ளான படகைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 (Mi-17) ஹெலிகொப்டர் ஒன்றும் பெல் 412 (Bell 412) விமானம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Zameera

8 இலட்சம் ரூபா பாடநூல்கள் மாயம் – 5 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்


 இசுருபாய கல்வி அமைச்சின் வெளியீட்டுத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்களைக் காணாமல் போகச் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 


முதலாம் தரத்திற்கான 19,892 தமிழ் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் இவ்வாறு உரிய விநியோக மையத்திடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். 


பாடநூல்கள் ஒப்படைக்கப்படவில்லை எனப் பதிவான முறைப்பாடு: 


கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் கடமையாற்றும் உற்பத்தி மற்றும் விநியோக ஆணையாளர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தார். 


கிழக்கு மாகாணத்தில் முதலாம் தரத்தின் 03 ஆம் தவணைக்குரிய பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்களை விநியோகிப்பதற்காக பியகம பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து நிறுவனமொன்றுடன் கடந்த மே 04 ஆம் திகதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதன்படி அம்மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அவை உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 


முறைப்பாட்டின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணையின் முடிவு: 


குறித்த முறைப்பாட்டின் பேரில் தலங்கம பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், நேற்று (14) 05 சந்தேகநபர்களைக் கைது செய்தனர். 


சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான முதலாம் தரப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடநூல்கள் 19,892 ஐ மோசடி செய்தமை மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


பழைய காகிதக் கடைக்கு விற்கப்பட்ட பாடநூல்கள் பற்றிய அதிர்ச்சித் தகவல்: 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாடநூல் தொகுப்பைக் கொண்டு சென்ற போக்குவரத்து நிறுவனத்தின் லொறியின் சாரதி (முதலாவது சந்தேகநபர்), அலவ்வ, பாதயாய, மாவத்த பஹல, கெப்பிட்டிவலாஹேன பகுதியில் உள்ள பழைய இரும்பு மற்றும் காகிதம் வாங்கும் நபர் ஒருவரிடம் அனைத்துப் புத்தகங்கள் மற்றும் தாள்களைக் கிலோ ஒன்று 25.00 ரூபாவிற்கு விற்றுள்ளமை பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளது. 


அதன்படி, அந்தப் புத்தகங்களின் மொத்த எடை 1,700 கிலோகிராம் ஆக இருந்துள்ளதுடன், அவர் அந்தத் தொகுதியைக் கிலோ 25 ரூபா வீதம் வாங்கியுள்ளார். 


25 ரூபாவிற்கு வாங்கிய தொகுதியை 50 ரூபாவிற்கு விற்ற விதம். 


பழைய கழிவுப் பொருட்களை வாங்கிய இரண்டாவது சந்தேகநபர், 25 ரூபாவிற்கு வாங்கிய அந்தப் பாடநூல் தொகுதியைக் கிலோ ஒன்று 40 ரூபா வீதம் மீண்டும் விற்றுள்ளார். 


அவர், நாரம்மல பகுதியில் வசிக்கும் பழைய இரும்பு மற்றும் காகிதம் வாங்கும் நபருக்கு அதனை விற்றுள்ளார். 


பின்னர், நாரம்மலையைச் சேர்ந்த மூன்றாவது சந்தேகநபர், அந்தப் பாடநூல் தொகுதியைக் கிலோ ஒன்று 50 ரூபா வீதம் நிகவெரட்டிய பகுதியில் உள்ள ஒருவருக்கு மீண்டும் விற்பனை செய்துள்ளார். 


50 ரூபாவிற்கு வாங்கிய பாடநூல்கள் மீண்டும் வத்தளை பகுதிக்கு விற்பனை: 


இவ்வாறு பாடநூல்களை வாங்கிய நான்காவது சந்தேகநபர், அந்தத் தொகுதியை வத்தளையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


வத்தளையிலுள்ள அந்த நிறுவனம் பழைய காகிதங்கள், கார்ட்போர்டுகளைச் சேகரித்து இயந்திரங்கள் மூலம் வெட்டிப் பண்டல்களாக மாற்றி இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 


முதலாவது சந்தேகநபரின் பழைய குற்றப் பின்னணி: 


இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தலங்கம பொலிஸார், கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரான லொறி சாரதிக்கு எதிரான பல பழைய குற்றச்சாட்டுகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளனர். 


அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு தொம்பே பொலிஸாரால் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதே ஆண்டின் நவம்பர் 28 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 


மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரிலும், அதே ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி கொடூர விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. 


இதற்கமைய, கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் பாடநூல்களை உரிய விநியோக மையத்திடம் ஒப்படைக்கத் தவறியமை, குற்றவியல் மோசடி செய்தமை மற்றும் அரச சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று (15) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

SHAHNI RAMEES

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி : குரல் பதிவுகளுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது!

 


மெகசின் சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை

SHAHNI RAMEES

இந்தியா வருகிறார் ஈரான் அதிபர்!

 


புதுடெல்லி,


அமெரிக்கா உடனான போருக்கு மத்தியில் பிரிக்ஸ்

Zameera

இந்தியாவின் 80-வது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மோடி உரை!


 நாட்டின் வளர்ச்சியின் பலன் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.


நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.


அவர் பேசும்போது, இன்றைய நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இன்று இந்தியாவில் 80-வது சுதந்திர தின நிகழ்வு

Zameera

ஷிரான் பாசிக், கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைப்பு


 டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


சந்தேகநபருடன் சேர்ந்து மேலும் இரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் விசாரணைக்காக அந்தப் பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


சந்தேகநபர்கள் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 


தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச் சென்றிருந்தார். 


ஈரான் - அமெரிக்க போரின் போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் நடத்த ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது கைபேசியில் வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். 


சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளில் தெரியவரும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Zameera

பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை


 பொதுப் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் ஏனைய வாகனங்களை நிறுத்துவதற்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகளை வீதியின் நடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதுடன், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் உருவாவதாக பொலிஸார் கூறுகின்றனர். 


அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், தற்போது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் பயணம் செய்யக்கூடிய பேருந்து சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து நிறுத்தங்களில் அப்பேருந்துகளை நிறுத்துவதற்கு ஏதுவாக எவ்வித தடைகளும் இன்றி இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 


இவ்வாறு ஏனைய வாகனங்களை நிறுத்துவதால், மாற்றுத்திறனாளிகள் மட்டுமன்றி ஏனைய பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். 


இதற்கமைய, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், பேருந்து நிறுத்தத்தை அணுகுவதற்கு 30 மீற்றருக்குள்ளும் வெளியேறும் திசையில் 15 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்துவது அதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. 


அத்துடன், பேருந்து ஒதுக்கிடங்கள் (Bus Bays) கொண்ட பேருந்து நிறுத்தங்களில் அணுகும் திசையில் 15 மீற்றருக்குள்ளும், வெளியேறும் திசையில் 10 மீற்றருக்குள்ளும் ஏனைய வாகனங்களை நிறுத்துவது அவ்வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. 


பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்கள் பாதுகாப்பாகப் பேருந்துகளில் ஏறி இறங்குவதற்கு வசதியாக, பேருந்து நிறுத்தங்களில் ஏனைய வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


 இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று அதிகாலை (15) 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.



இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில நடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.


சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் மூலம், கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு விலகி இருக்குமாறு அந்நாட்டின் தேசிய புவியியல் நிலையம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


இலங்கைக்கு நிலநடுக்க ஆபத்தில்லை


இதற்கிடையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தையடுத்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்க நிலைமையினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Zameera

ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்


 நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு பாரியளவில் மண்மேடு சரிந்து போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், சரிந்த மண்மேடு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குயில்வத்தை பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட வீதிகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அந்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




(செ.திவாகரன்)


Friday, August 14, 2026

SHAHNI RAMEES

(Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!


டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள்

SHAHNI RAMEES

A/L எழுத சென்ற பாடசாலை மாணவிகளின் ஹிஜாபை பலவந்தமாக அகற்ற முயற்சித்த பரீட்சை மேற்பார்வையாளர்!

 


"அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில்