Our Feeds


Sunday, October 4, 2026

SHAHNI RAMEES

"அரசாங்கம் பொறுப்பேற்ற போது 290 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெட்ரோல் தற்போது 414 ரூபாய்..!

 


"உலகச் சந்தையில் விலை அதிகரிக்கும் போது,

Zameera

அனோஜனுக்காக சவூதி செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

 


மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவே இதற்காகப் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


தற்போது அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்தச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சவூதி அரேபியாவிலுள்ள சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி சரியான முறையில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 


பேஸ்புக் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னூட்டமொன்றின் மூலம் மத நிந்தனை செய்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினாலேயே சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 


அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனையைக் குறைத்துக் கொள்வதற்காக இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.


Zameera

ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

 

ஒக்டோபர் மாதத்திற்குரிய லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அறிவித்துள்ளது.


அதற்கமைய, சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விற்பனை விலைகள்,


12.5 கிலோகிராம்  எரிவாயு: ரூபா 4,365


05 கிலோகிராம் எரிவாயு: ரூபா 1,750


2.3 கிலோகிராம் எரிவாயு: ரூபா 815

Zameera

சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 


சுற்றுலாவுக்காகச் சென்ற மாணவர் ஒருவர் சமனல வெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போது நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மொனராகலையிலிருந்து கடந்த 3 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்காகக் கல்விச் சுற்றுலாவுக்காக வருகை தந்த மாணவர்களின் குழுவொன்று, கூரகல விகாரைக்குச் செல்லும் வழியில் சமனல வெவ நீர்தேக்கத்தை பார்வையிடுவதற்காக தமது பேருந்தை நிறுத்தியுள்ளனர்.


இதன்போது, மூன்று மாணவர்கள் நீரொடும் பகுதியில் நீராடுவதற்காக முற்பட்ட போது அவர்களில் ஒருவர் நீரோட்டத்திற்குள் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், காணாமல்போன மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பிபிலை, கிரியன்கும்புர பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஆவார். சம்பவம் தொடர்பில் சமனல வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHAHNI RAMEES

தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரிந்துவிடும்!


மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி,

Zameera

விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் தீர்ப்பை அறியுங்கள் - சீலரத்ன தேரர்


 (க.சிவலிங்கமூர்த்தி)


மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி, தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை அறிந்துகொள்ள வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டினார்.


ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.செய்தி சந்தா


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் அரசியல்வாதிகளின் விமர்சனப் பகுத்தறிவு குறைந்துவிட்டதாகக் கூறுகின்றார். விமர்சனப் பகுத்தறிவு தொடர்பில் பேசுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் பேச வேண்டும். மக்கள் மத்தியில் சென்று அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்தால், மக்கள் எவ்வாறான நிலையில் இருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.



மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கூறுங்கள். நீங்கள் உண்மையாகவே மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் பேசத் தயாராக இருந்தால், மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.


மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது வெளிப்பட்டுவிடும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, அரசாங்கம் தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றார்கள், அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அவர்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றார்கள் என்பதையும் தேர்தல் முடிவின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, மக்களின் விமர்சனப் பகுத்தறிவு குறைந்துவிட்டதாக கூறுவதற்கு முன்னர், மக்களிடம் சென்று அவர்களுடன் பேசுங்கள். தேர்தலை நடத்துங்கள். அதன் பின்னர் மக்கள் வழங்கும் தீர்ப்பை பாருங்கள்.


எனவே, தேர்தலை நடத்தாமல் மக்கள் மத்தியில் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறுவதற்குபதிலாக, மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் தீர்ப்பை நேரடியாக பெறுங்கள். தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக தெரிந்துவிடும்.


மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் மக்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, தேர்தலை நீடிக்காமல் விரைவாக நடத்தி, மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்றார்.

SHAHNI RAMEES

சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்!

 


விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று

SHAHNI RAMEES

ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்...



பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது

Zameera

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!

 


வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய, குறித்த எச்சரிக்கை நாளை (05) அதிகாலை 01.00 மணி வரை செல்லுபடியாகும். 


இப்பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 


இதனிடையே மத்திய, சப்ரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 


மேலும், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Zameera

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

 


இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. 


தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளுக்கு அமைய, இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 100,871 ஆகும் என்பதுடன், அதன் மரண விகிதம் 0.077% ஆகப் பதிவாகியுள்ளது. 


மேலும், மொத்த நோயாளர்களில் 52.45% அதாவது 52,906 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். 


மாவட்ட மட்டத்தில் பார்க்கையில், அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 21,377 ஆகும். 


அதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தில் 19,759 நோயாளர்களும், கண்டியில் 7,689 நோயாளர்களும், களுத்துறையில் 6,400 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


மாதாந்தத் தரவுகளைப் பார்க்கையில், ஒக்டோபர் மாதத்தின் கடந்த சில நாட்களில் 151 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், செப்டம்பர் மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 5,230 ஆகும். 


ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 29,964 ஆகும். 


இது தவிர, ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 


தற்போது 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி ஆபாய வலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 


நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்து, சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கோரியுள்ளனர்.

SHAHNI RAMEES

கைதான ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்!

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட
SHAHNI RAMEES

அமெரிக்க - ஈரான் மோதல் விவகாரம்: தடைகள் விதிக்கும் அமெரிக்கக் கொள்கை உலகளாவியது இலங்கைக்குப் பிரத்யேகமானதல்ல - வெளிவிவகார அமைச்சு



 அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்குச்

SHAHNI RAMEES

இது பெரும் அடக்குமுறையின் ஒரு ஆரம்பப்புள்ளி! - அடுத்த வாரம் முதல் பரந்துபட்ட மக்கள் பிரசாரம் ஆரம்பம்!


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து

SHAHNI RAMEES

5,000/- இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

 

சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
ShortNews

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வாய்ப்பு.

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்குள் காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் (FCID) முன் ஆஜராகத் தவறினால், அவருக்கு எதிராகப் பயணத் தடை கோரப்படும் எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதற்காக நாட்டை விட்டுச் சென்றிருந்த ஷிராந்தி ராஜபக்ச, தான் தலைமை தாங்கிய ‘சிறிலியா’ (Siriliya) நிறுவனம் தொடர்பாகக் காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு 14 நாள் அவகாசம் கோரியிருந்தார். அவர் உரிய காலத்தில் ஆஜராகத் தவறினால், காவற்துறையினர் உடனடியாகப் பயணத் தடை கோருவார்கள் என அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டன. இதனால் அவர் விமான நிலையத்தை வந்தடைந்ததும் கைது செய்யப்படக்கூடிய சூழல் உருவாகலாம்.

ஷிராந்தி ராஜபக்ச கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி மருத்துவச் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றிருந்தார். செப்டம்பர் 24ஆம் திகதி காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் முன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்து, விமான நிலையத்தில் வைத்து அவருக்குரிய அறிவித்தல் காவற்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

எனினும், அவர் நாடு திரும்புவதற்கான உத்தேசத் திகதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் ஷிராந்தி ராஜபக்ச மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளமையால், அவரது மீள் வருகைத் திகதியானது மருத்துவத் தேவைகளைப் பொறுத்தே அமையும் எனவும் ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின்   பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

ShortNews

ஹிஜாப், பர்தா, நோன்பு, ஹஜ் எல்லாம் மற்ற இனத்தவர்களுக்கு விளங்குமா?

 


 

ஹிஜாப், பர்தா, அத்தஹிய்யாத்து, வஜ்ஜஹத்து, நோன்பு, ஹஜ் எல்லாம் மற்ற இனத்தவர்களுக்கு விளங்குமா? அதனால் தான் முஸ்லிம் கெபினட் பொறுப்பு கேட்கிறோம். 

ஜனாஸா எரித்த கோட்டாவின் அரசில் அமைச்சுப் பதவி பெற்ற முஷர்ரப் முதுநபீன் கேள்வி.

ShortNews

களுத்தரையில் கைதான ஞானசார தேரர் CCD க்கு அழைத்து வரப்பட்டார்.




பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.


நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய, அவர் நேற்று (03) களுத்துறை, தீனியாவள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை அண்மையில் உயர்நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ShortNews

பல மாகாணங்களில் 75 mm க்கும் அதிக மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் பட்டியல் வெளியீடு

 


மத்திய, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 3, 2026

Zameera

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கக்கூடும்

 

சோள இறக்குமதிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.கலாச்சாரம் காண்



விலங்கு உணவிற்காக சோளத்திற்குப் பதிலாக அரிசியைப் மாற்றுப் பொருளாகப் பயன்படுத்துவதால், கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


மேலும், கடுமையான சோளப் பற்றாக்குறை காரணமாகச் சிறு அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர் தொழிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHAHNI RAMEES

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் கைது


நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர்,