Our Feeds


Showing posts with label # news.#Braking news #Braking news.#Braking. Show all posts
Showing posts with label # news.#Braking news #Braking news.#Braking. Show all posts

Wednesday, June 25, 2025

Admin

சர்வதேச அணுசக்தி அமைப்புடன் (IAEA) இனி ஒத்துழைக்க மாட்டோம் - ஒப்பந்தத்தை தூக்கியெறிந்தது ஈரான் பாராளுமன்றம்.



ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான மசோதாவை அந்நாட்டு பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாக ஈரானின் நூர்நியூஸ் தளம் தெரிவித்துள்ளது.


இந்த திட்டத்தின் கீழ், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே IAEA ஆய்வாளர்கள் ஈரானுக்குள் நுழைய முடியும், அதுவும் அந்த நிறுவனம் நாட்டின் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tuesday, June 24, 2025

Admin

நாளை முஸ்லிம் காங்கிரஸில் நேரடியாக இணைகிறார் முன்னாள் எம்.பி முஷர்ரப் - 27ம் திகதி பொத்துவில் பி.ச தலைவராகும் வாய்ப்பு



முன்னால் பாராளமன்ற உறுப்பினரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான  SMM. முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய  பொத்துவில் பிரதேச சபை எழு (07) உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நேரடியாக இணைத்து கொள்ளும் நிகழ்வு  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் ( MP) முன்னிலையில் நாளை 25.06.2025 (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக உறுதியான தகவல்கள் ShortNews க்கு கிடைத்துள்ளன. 


மு.க வில் உத்தியோகபூர்வமாக இணைந்த பின் எதிர்வரும் 27ம் திகதி பொத்துவில் பிரதேச சபைத் தலைவராக முஷர்ரப் தெரிவாகுவார் என அறியக் கிடைக்கிறது. 


Sunday, June 22, 2025

Admin

அமெரிக்க தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை இடம் மாற்றிய ஈரான் - அமெரிக்க தாக்குதல் தோல்வி எனவும் அறிவிப்பு



ஈரானுடைய அணு நிலையங்கள் மீது இன்று அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் வெற்றியளிக்கவில்லை எனவும், செறிவூட்டப்பட்ட யுரேனியும் உள்ளிட்ட தேவையான அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டது என்றும் ஈரான் அறிவித்துள்ளது.


இந்நிலையில், அல்-ஜஸீரா, நிவ்யோர்க் டைம்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செட்லைட் புகைப்பட தகவல்கள் பிரகாரம். அமெரிக்காவின் இன்றைய தாக்குதல்கள் ஈரானிய அணு நிலையங்களின் வாயில்கள் மீது மாத்திரமே நடத்தப்பட்டுள்ளதாக செட்லைட் காட்சிகள் விபரிக்கும் அதே வேலை, தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே செறிவூட்டப்பட்ட யுரேனியும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.


சர்வதேச அளவில் தாம் பெரும் சாதணையை நிகழ்த்தி விட்டதாக அமெரிக்க அதிபர் மார் தட்டிக்கொண்ட ஈரான் அணு தயாரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.


Admin

இஸ்ரேல், ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் - 57 அரபு, இஸ்லாமிய கூட்டமைப்பு - OIC அறிக்கை.



இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் வழக்கமான தொடர்பை ஏற்படுத்த ஒரு அமைச்சர் தொடர்பு குழுவை அமைக்கும் என்று கூறியது, இது பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகளை ஆதரிக்கவும் "ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்தவும்" உதவும்.


இஸ்தான்புல்லில் நடந்த OIC வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிவிப்பில், 57 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஈரானுக்கு எதிரான "இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை" கண்டித்து, "இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசரத் தேவையையும் இந்த ஆபத்தான அதிகரிப்பு குறித்த அவர்களின் பெரும் கவலையையும்" வலியுறுத்தியது.


"இந்த ஆக்கிரமிப்பை நிறுத்தவும், இஸ்ரேலை குற்றங்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யவும்" சர்வதேச சமூகத்தை அது வலியுறுத்தியது.


தனித்தனியாக, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் குறித்து "ஆழ்ந்த கவலை" கொண்டுள்ளதாக OIC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இது "பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் மற்றும் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆபத்தான அதிகரிப்பு" என்று கருதுவதாகக் கூறியது.

Monday, June 16, 2025

Admin

அடுத்த கட்டம் அகோரமாக இருக்கும் | இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கள்..... யூதர்களுக்கு ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு



ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன தேசமான - இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள். அடுத்த தாக்குதல்கள் உச்சமாக நடத்தப்பட இருக்கின்றன. அதில் ஏற்படும் ஆபத்துக்களுக்கும், சேதங்களுக்கும் நாம் பொறுப்பேற்க்க மாட்டோம். என இஸ்ரேலிய யூதர்களுக்கு ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. 





Tuesday, June 10, 2025

Admin

கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்த ஐந்து யூத மதகுருமார்கள் மீரிகமவில் கைது - நடந்தது என்ன?



மிரிகாமவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் யூத மத சம்பிரதாயமான கோஷர் முறையை மேற்கொண்ட ஐந்து யூத மதகுருமார்கள், பயண விசா நிபந்தனைகளை மீறியதற்காக நேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் (DIE) கைது செய்யப்பட்டனர்.


குடிவரவு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வு தகவலின் அடிப்படையில் தொழிற்சாலையில் சோதனை நடத்தி, மூன்று இஸ்ரேலியர்கள் உட்பட ஐந்து யூத மதகுருமார்களை கைது செய்தனர். மற்ற இருவர் ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.


முதல் கட்ட விசாரணைகளில், இவர்கள் சமீபத்தில் பயண விசாவில் இலங்கைக்கு வந்து, யூத மதச் சட்டங்களுக்கு ஏற்ப கோழி இறைச்சியை கோஷர் முறையில் தயாரித்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இறைச்சி, உள்ளூர் சபாட் ஹவுஸ் யூத மத மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, யூத மக்கள் அதிகம் வசிக்கும் அருகம்பே கடற்கரை நகரத்திற்கு அனுப்பப்படவிருந்தது.


குடிவரவு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர்,  தெரிவித்ததாவது: 


“இரண்டு இஸ்ரேலியர்கள் மார்ச் மற்றும் மே மாதங்களில் இலங்கைக்கு வந்தனர். மற்றவர்கள் ஜூன் முதல் வாரத்தில் வந்தனர். யூத மத உணவு சம்பிரதாயங்களை மேற்கொள்வது இலங்கையில் சட்டவிரோதமல்ல. ஆனால், பயண விசாவில் வணிக நோக்கில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்வது சட்டவிரோதமாகும். பயண விசாவில் எந்தவொரு வேலை தொடர்பான செயல்பாடும் அனுமதிக்கப்படாது.”


மேலும், இதுபோன்ற செயல்பாடு இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மதகுருமார்கள் இதற்கு முன் மத அனுமதி பெறாமல் இலங்கைக்கு வருவதற்கு முன் மதவிவகார அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.


குடிவரவு திணைக்களம், சமீபத்தில் பயண விசாவில் மதப் பிரசாரங்களை மேற்கொண்ட வெளிநாட்டு மதகுருமார்களை கைது செய்து நாடு கடத்தியுள்ளது. இது நேரடி மதப் பிரசாரமாக இல்லாவிட்டாலும், இதற்கு குறைந்தபட்சம் வணிக விசா பெற்றிருக்க வேண்டும் என்று அதிகாரி தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட ஐந்து வெளிநாட்டு ஆண் மதகுருமார்களும், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.


குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சமிந்த பத்திராஜாவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

Admin

தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக போராட்டம்? – கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு.



சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும் விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு கோரியும் நேற்று (09) போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டம் பொசன் பௌர்ணமி தினமான இன்று (10) திஸ்ஸ விகாரைக்கு பல சிங்கள மக்கள் அழைத்து வரப்படவுள்ளதால் தையிட்டி விகாரை பகுதியில் குழப்பமான சுழல் உருவாகலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் நீர்த்தரைப் பிரயோக இயந்திரமும் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Admin

சீனாவில் டில்வின் சில்வா, முனீர் முளப்பர் உள்ளிட்ட குழுவினர் | சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு



மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங்  மாகாண ஆளுநர் லியு ஜீக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


குறித்த சந்திப்பு 9 ஆம் திகதி திங்கட்கிழமை  சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் பிரதான பொதுமக்களின் வேலைவாய்ப்பு மண்டபத்தில் நடைபெற்றது.


சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.


இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நட்புறவு குறித்து குறிப்பாக கலந்துரையாடப்பட்டது.


இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனாவும் ஜெஜியாங் மாகாணமும் எதிர்காலத்தில் வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டன.


இதன்போது, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க, ஜெஜியாங் மாகாண துணை ஆளுநர் லு ஷென், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜெனரல் பான் சியு பின் மற்றும் ஜெஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Friday, June 6, 2025

Admin

ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசுக் கட்சி!



இலங்கை தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது.


மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ஆதரவு கோரியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினரான ஜெசீதன், மானிப்பாய் பிரதேச சபையின் NPP உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.


இருப்பினும் கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா? இல்லையா? என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஜெசீதனிடம் கூறியதாக அறிய முடிகிறது.


பு.கஜிந்தன்

Admin

அமெரிக்கா வரை தாக்கும் அணுவாயுத ஏவுகணையை உலகுக்கு காண்பித்த சீனா.



அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்களை மறைத்து வைத்திருந்த சீனா முதன் முறையாக தற்போது தன்னுடைய சக்தி வாய்ந்த 12,000 கி.மீ வரை சென்று துல்லியமாக இலக்கை தாக்கும் அணுவாயுதத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறது.


ஆயுத மோதலை சீனா இதுநாள் வரை விரும்பியதில்லை. பொருளாதாரத்தை வைத்துக்கொண்டு சண்டை செய்து வந்த இந்த நாட்டை, அமெரிக்கா இப்போது ஆயுத களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது. 


சீனாவின் அணு ஆயுதம் குறித்து அந்நாட்டின் செய்தி ஊடகமான சிஜிடிஎன், வீடியோவை வெளியிட்டிருந்தது. 


அதில், இந்த அணு ஆயுதத்தின் பெயர் ‘டிஎஃப்-5’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையை சேர்ந்த ஏவுகணையாகும். இதை ஏன் சீனா பகிரங்கமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தியது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 


தாய்வானுக்கு அருகில் உள்ள அனைத்து தீவுகளிலும் இராணுவ தளபாடங்களை சீனா குவித்து வருகிறது. 


என்னதான் இந்த ஏவுகணை அமெரிக்காவைத் தாக்கும் என்றாலும், ஆசியாவில் அமெரிக்கா சுமார் 41 இராணுவ முகாம்களை கொண்டிருக்கிறது. இதுவே சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். 


கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவுடன் மறைமுகமாக மோதி வந்த அமெரிக்கா, 2 ஆண்டுகளாக தைவான் விஷயத்தின் மூலம் நேரடி மோதலுக்கு தயாராகி வருகிறது. தைவான் தனி நாடு என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால், அது சீனாவின் ஒரு பகுதிதான் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. 


இதை வைத்து ஆசியாவில் சீனாவின் பலத்தை பரிசோதித்து பார்க்க சீனா தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


(இயூரேஷியன் டைம்ஸ்)

Admin

உக்ரைன் - ரஷ்யா யுத்தம் | இரு தரப்பிலும் 3.5 லட்சம் ராணுவம் பலி - 14 லட்சம் பேர் படுகாயம்.



உக்ரைனில், ரஷ்யா நடத்திவரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமார் 3.5 லட்சம் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போர் திட்டம் மற்றும் சர்வதேச ஆய்வு மையம்’ (சிஎஸ்ஐஎஸ்) தெரிவித்துள்ளது.


கடந்த 2022 முதல் நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 இலட்சம் வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சமாகவும் உக்ரைன் வீரா்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சமாகவும் உள்ளது.


இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போர்க் கள இழப்பாகும்.


காயமடைந்த 10 இலட்சம் ரஷ்ய வீரர்களில் 2.5 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தரப்பில் 60,000 முதல் 1 இலட்சம் வீரர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.


ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு அதிகமாக இருந்தாலும், மக்கள்தொகை அடிப்படையில் உக்ரைன் வீரர்களின் உயிரிழப்பு அதிகம்.


உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பிவருகிறது. எனவே வீரர்களின் உயிரிழப்பு ரஷ்யாவை வெகுவாக பாதிக்காது.



போர் முனைகளில் உக்ரைன் வீரர்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்களை எதிர்கொண்டுள்ளனர். ஒவ்வொரு 2.5 இலட்சம் உக்ரைன் வீரர்களுக்கு எதிராகவும் 4 இலட்சம் ரஷ்ய வீரர்கள் போரிட்டு வருகின்றனர்.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு போர் முனைகளில் ரஷ்யாவின் முன்னேற்றம் முழுவதும் நின்றுவிட்டது. மற்ற பகுதிகளிலும் நாளொன்றுக்கு 165 அடி தூரம்தான் ரஷ்யா முன்னேற்றம் கண்டுவருகிறது.


தற்போது உக்ரைனின் 19 சதவீத பகுதியை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஆனால், இதில் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய பகுதி ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது ரஷ்யா கைப்பற்றிய கிரீமியா தீபகற்பமும் (7 சதவீதம்) இதில் அடங்கும்.


அந்த வகையில், 2022ஆம் ஆண்டு போர் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைனின் வெறும் 12 சதவீத பகுதியைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யா 2.5 இலட்சம் வீரர்களை இழந்துள்ளது.


மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷ்யா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களை இழந்துள்ளது.



அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் இரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்துக் கொன்றுள்ளது.


(பி.பி.சி)

Admin

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - தொழிலதிபர் மாஸ்க் மோதல் | ஒரே நாளில் 150 பில்லியன் சரிந்தது “டெஸ்லா”



ட்ரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின்  விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப்- தொழிலதிபர் எலான் மஸ்க் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ட்ரம்ப், எலான் மஸ்க் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதால் அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ட்ரம்ப் உடனான மோதலை அடுத்து எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகளின்  விலை 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 150 பில்லியன் டொலர்கள் வரை சரிந்துள்ளது.


இதேவேளை எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனத்தின் பங்குகளும் சரிந்துள்ளன. மஸ்க்- ட்ரம்ப் உடனான மோதல் அதிகரித்து வரும் நிலையில் டெஸ்லா பங்குகள் மேலும் சரிவடையும் என முதலீட்டார்கள் கணித்துள்ளனர்.

Admin

மேர்வின் சில்வாவிடம் 800 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் - குற்றப்பத்திரிகை தாக்கல்



800 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.


இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் ஆதித்யா படபெண்டிகே முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Admin

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கே சம்பவம் பண்ணிய ஆபிரிக்காவின் சிங்கம் இத்ரீத் தபி



அமெரிக்கா 12 நாடுகளுக்கு எதிராக விதித்த பயணத் தடையில் சாட் நாடும் சேர்க்கப்பட்டதை அடுத்து, அந்நாடு அமெரிக்க குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.


சாட் நாட்டின் அதிபர் இத்ரிஸ் டெபி, வியாழக்கிழமை தனது பேஸ்புக் பதிவில் இந்த முடிவை அறிவித்தார்.


இது தொடர்பாக அவர், “பரஸ்பர நட்பு என்ற கொள்கையின் அடிப்படையில், அமெரிக்க குடிமக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.


மேலும், “சாட் நாட்டிடம் வழங்குவதற்கு விமானங்கள் இல்லை, பில்லியன் டாலர்கள் இல்லை, ஆனால் சாட் நாட்டுக்கு அதன் கவுரவமும் பெருமையும் உள்ளது” என்று கூறி, கத்தார் நாடு அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானத்தை பரிசாக வழங்கியதைக் குறிப்பிட்டார்.


அமெரிக்காவின் பயணத் தடையால் பாதிக்கப்பட்ட மற்ற ஏழு ஆப்பிரிக்க நாடுகளுடன் சாட் நாடும் இணைந்துள்ளது.


முன்னாதாக 


தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் யெமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


அதேபோல, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் கையெழுத்திட்ட பிரகடனத்தில், எனது முதல் நிர்வாகத்தின் போது, வெளிநாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை நான் தடை செய்தேன். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நமது எல்லைகளை அடைவதை வெற்றிகரமாகத் தடுத்தது.


ஜனவரி 20, 2025 இன் நிர்வாக ஆணை 14161 (வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்) மூலமாக, நமது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்த குடியேற்றச் சட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டினரிடமிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பது அமெரிக்காவின் கொள்கை என்று நான் குறிப்பிட்டேன்.


அதன்படி, அமெரிக்காவில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கோ தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த விசா வழங்கும் செயன்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். (ரொய்ட்டர்)

Admin

3 ஆயிரம் வாகனங்களுடன் நடுக்கடலில் எரியும் மாபெரும் கப்பல் - மீட்க்க முடியாமல் கைவிட்டது நிறுவனம் - ஏன்?



அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக் கைவிட்டுள்ளதாக, கப்பலை இயக்கும் Zodiac Maritime நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


கடந்த மே மாதம் 26ஆம் திகதி மொர்னிங் மிடாஸ் என்கின்ற லைபீரியா கொடி ஏற்றப்பட்ட இந்த கப்பல் சீனாவின் யான்டாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு மெக்சிகோவின் லாசரோ கார்டெனாஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது.



இதன்போது, ஆரம்பத்தில் மின்சார வாகனங்கள் நிரப்பப்பட்ட தளம் ஒன்றிலிருந்து தீப்பிடித்து எரிந்து புகை வெளிவந்துள்ளது. கப்பல் எந்த பிராண்ட் வாகனங்களை ஏற்றிச் சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


கப்பல் அலாஸ்காவில் உள்ள அடாக்கிலிருந்து தென்மேற்கே 300 மைல் (482.8 கிமீ) தொலைவில் இருப்பதாக கடலோர காவல்படை அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.


கப்பலில் இருந்த 22 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் உயிர்காக்கும் படகு மூலம் வெளியேற்றப்பட்டு, அமெரிக்க கடலோர காவல்படையுடன் இணைந்து அருகிலுள்ள வணிகக் கப்பலுக்கு மாற்றப்பட்டனர்.



சோடியாக் நிறுவனம் கப்பலை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாகக் தெரிவித்துள்ளது.


கப்பல்களில் மின்சார வாகனங்களினால் ஏற்படும் தீ, வெப்பம் மற்றும் மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதால் அணைப்பது சவாலானது, இது பல நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.


நிலைமையை சமாளிக்க விமானக் குழுவினரும் கட்டர் கப்பலும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்று கப்பல்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாகவும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.


கடந்த 2022 ஆம் ஆண்டு போர்ஷேஸ் மற்றும் பென்ட்லிஸ் உட்பட 4,000 சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று தீப்பிடித்த கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் போர்த்துகீசிய அசோர்ஸ் தீவுக்கூட்டத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

Monday, May 26, 2025

Admin

அறுகம்பேயில் “பிகினி” ஆடைக்கு தடையில்லை | முஸ்லிம் சமூகத்துடன் பேசியுள்ளோம். - பிரதியமைச்சர் ருவன்



நாட்டின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து பல்வேறு போலிச் செய்திகள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான நாசகார வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


வெலிகம மற்றும் அறுகம் குடா (Arugam Bay) பகுதிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இரண்டு சம்பவங்கள் மூலம் இது தெளிவாகிறது.


முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளியாகும். இந்த சம்பவம் 2024ம் ஆண்டு  இடம்பெற்றது என கண்டறியப்பட்டுள்ளது.


இரண்டாவது சம்பவம் அறுகம் குடா பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ”பிகினி” அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என கண்டறியப்பட்டுள்ளது.


கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி  அமைக்க  முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம் குடா  தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


"இது தொடர்பாக நாங்கள் அறுகம் குடாவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரணை செய்தோம். பொது இடத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றதாகவும், அதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.


அரசாங்கம் தனது அதிகாரத்தை வலுப்படுத்த செயற்பட்டு வரும்  வேளையில்,  அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக  சில நபர்கள் அல்லது குழுவினரால் மறைமுக நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்ட விடயமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.


இனங்களுக்கிடையில் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாகவே அரசாங்கம் இந்தச் சம்பவங்களைக் கருதுகிறது.


சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


இதுபோன்ற போலி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Sunday, May 18, 2025

Admin

கொழும்பின் அதிகாரம் NPP வசம்..! - மேயராக ராய் பல்தசார் பதவியேற்கும் வாய்ப்பு.



கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தற்போதைக்கு மாநகர சபைக்குத் தெரிவான 63 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.


அதன் பிரகாரம் எதிர்வரும் 02ம் திகதி பெரும்பாலும் தேசிய மக்கள் சக்தியின் விராய் பல்தசார் கொழும்பு மாநகர மேயராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


சஜித்தின் பிடிவாதம்.


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக குறித்த முயற்சியில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Admin

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தில் மாற்றமா?



மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று  "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்.


இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்றுவரை பார்த்து வருகிறோம். இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. தனி நபர் செல்வாக்கை விட கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகமென்பதால் அரசியல் முகவரி இழந்தவர்களும் அடைக்கலம் தேடும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகிறது.


மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்து பல சவால்கள், உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பங்களிலும் தனது நேசத்துக்குரியவர்கள் தனக்கு துரோகம் செய்த போதும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அரச ஆதரவோடு அதிகாரங்களைப்பெற்று முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக வந்த போதும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தக்கட்சிக்கும் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்.


இவ்வாறான சவாலான சந்தர்ப்பங்களில் தலைமைக்கு பக்க பலமாக தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் இருந்தார் என்பதாலும், ரவூப் ஹக்கீமிடம் இருக்கும் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணங்கள், விவேகம், மும்மொழி தேர்ச்சி, சிறந்த அணுகுமுறை, சட்டஅறிவு போன்ற ஆளுமைகளை தனக்குள் வைத்திருப்பதைக்கூட இருந்து கண்காணித்ததன் காரணமாக தனக்குப்பின் இக்கட்சியை வழிநடாத்த சிறந்த தலைவராக பல சந்தர்ப்பங்களில் அஷ்ரப் அவர்களால் ரவூப் ஹக்கீம் அடையாளப்படுத்தப்பட்டார் என்பது உண்மை.


தலைவர் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் தலைமைத்துவப் போட்டி கட்சிக்குள் ஏற்பட்ட போது தான், தான் தலைவர் என சிலர் கோசமெழுப்பி தலைமைத்துவத்தை அடையமுயற்சித்த போது அவை வெற்றியளிக்கவில்லை.


மாறாக, மர்ஹும் தலைவர் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்தெடுக்கப்பட்ட போராளிகளால் மர்ஹும் தலைவரின் விருப்பப்படி தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.


அன்று தொடக்கம் இன்றுவரை தலைமைத்துவ சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டு வருகிறார். தலைமைத்துவ போட்டியினால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சிலர் அரச ஆதரவோடு பிரிந்து தனிக்கட்சி அமைத்து தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொண்டாலும் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்குமான மௌசு குறைந்தபாடில்லை.


பல தடவைகள் பலரும் இக்கட்சிக்குள்ளிருந்து கொண்டும் வெளியிலிருந்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கெதிராக வெற்றுக்கோசங்களை எழுப்பிய போதல்லாம் கட்சியின் போராளிகளாலும் ஆதரவாளர்களாலும் தலைமைத்துவம் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது எதார்தமான விடயமாகும்.


தேர்தல்களில் தோல்வியடையாது தொடராக மக்கள் ஆதரவோடு வலம் வரும் ரவூப் ஹக்கீமைத்தோற்கடிக்க காலத்திற்கு காலம் அரச அனுசரணையில் பலர் முயற்சித்து தோல்வி கண்ட நிலையில், கடந்த பாராளுமன்றத்தேர்தலில் அனுர அலையில் ரவூப் ஹக்கீமை கண்டியில் மூழ்கடித்து விடலாம் என எதிரிகளை விட கட்சிக்குள்ளிருக்கும் துரோகிகளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட துரோகிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டவேளையில் இறை உதவியோடு மக்களின் ஆதரவோடு வெற்றிவாகை சூடினார்.


தற்போது உள்ளூராட்சித்தேர்தல் முடிந்த கையோடு ஒரு சிலர் மீண்டும் வெற்றுக்கோசங்களை எழுப்புவதை முகநூல்களில் காணலாம். அது எவ்வாறிருக்கிறது என்றால் "ஆடு நனையிது என ஓநாய் அழுத" கதையாகத்தான் இருக்கிறது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று சுகயீனப்பட்டாரே தவிற, பலவீனப்படவில்லை. இறை உதவியோடு பலமான தலைவராக தற்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். 


தேசியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற போது அங்கு நினைவு படுத்தப்படும் நாமம் ரவூப் ஹக்கீம் என்ற நாமம்தான். தேசிய முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுக்கும் தலைவர் என்றால் ரவூப் ஹக்கீம் என்பதில் கடந்தகால நிகழ்வுகள் சாட்சியங்களாக இருக்கின்றது.


ரவூப் ஹக்கீமை எதிர்க்கும் துரோகிகளை விட எதிரிகள் தற்போதைய சூழலில் இலங்கையின் அரசியலில் ரவூப் ஹக்கீமின் அவசியத்தைப்புரிந்து வைத்திருக்கிறார்கள். 


எனவே, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலன்களுக்காக ரவூப் ஹக்கீமை அன்று தொடக்கம் இன்றுவரை எதிர்க்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்ப்பும் வெற்றுக்கோசங்களும் ரவூப் ஹக்கீமை பலப்படுத்துமே தவிர, ஒரு போதும் பலவீனப்படுத்தாது. 


கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள், நடுநிலையானவர்கள், சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் தற்கால அரசியலில் ரவூப் ஹக்கீமின் வகிபாகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.


எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி


Admin

“பொத்துவில்” பிரதேச சபையில் மு.க ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார் முன்னாள் MP முஷர்ரப்



முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் பொத்துவில் பிரதேச சபையில் ஆட்சியமைக்கவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸில் நேரடியாக இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளை முஸ்லிம் கட்சிகளே பெரும்பாலும் கைப்பற்றியுள்ள நிலையில் பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், அஇமக, ஆளும் NPP, மற்றும் எதிர்க்கட்சியான SJB உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்ட நிலையில் அன்னாசிப் பழ சின்னத்தில் சுயேற்சைக் குழுவை களமிறக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொண்டார். 


இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு இன்னும் குறைந்தது ஒரு உறுப்பினரின் ஆதரவாவது தேவையென்கிற நிலையில் அது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், மு.க வின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக முஷர்ரப் முதுநபீன் பொறுப்பேற்கும் நிலையில் பிரதித் தவிசாளர் பதவி மு.கா உறுப்பினருக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

Admin

#Weather_Alert | நாடு முழுவதும் பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை.



பலத்த மழை தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்த அறிவிப்பு இன்று (18) காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களும் அவதானமாக இருக்குமாறு குறித்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், அதன் தாக்கம் காரணமாக, இன்று (18) மற்றும் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.